Categories
Tech டெக்னாலஜி

டிஜிட்டல் சொத்துக்கள்: இன்ஸ்டாகிராமுக்கு வர போகுது…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இன்று உலகம் முழுவதும் அதிகமாக பேசப்படும் பொருளாக என்.எஃப்.டி உள்ளது. இதில் என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒருவகை டிஜிட்டல் டோக்கன் ஆகும். நிஜ உலக சொத்துக்கள் (அல்லது) டிஜிட்டல் கலைப் படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி அதை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகிறது. தற்போது இந்த என்.எஃப்.டியை விரைவில் இன்ஸ்டாகிராமுக்கு கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வரப்படும். அதனை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிரிப்டோ வேலட்டும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும். அத்துடன் மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்தமான டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |