டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் சாலர்புல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியை மேற்கு வங்கத்தை சேர்ந்த அக்பர் அலி (65) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஒருவரின் அந்தரங்க உறுப்பில் அவரின் அனுமதி இன்றி கை மற்றும் கால்களை விடுவதாகும். ஆங்கில மொழியில் டிஜிட் என்பது விரல்களை குறிக்கிறது.
இந்த செயல் கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன்பு வரை பாலியல் வன்கொடுமை என்று கருதப்படவில்லை. இந்த சம்பவம் கைகளால் அடுத்தவரின் உடம்பை தொடுதல் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2013-ஆம் ஆண்டு டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பிறகே டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கு இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த டிஜிட்டல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டாலும் இதுவரை யாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படாத நிலையில், முதன்முறையாக தற்போது தான் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.