நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் மயமாக்க ரூ.3,768 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இயதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவ்வொன்றாக தாக்கல் செய்தார்.
அதில், நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் நடத்த ரூ.3,778 கோடி ஒதுக்கீடு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கு ரூ 1.500 கோடி ஒதுக்கீடு. சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும். போதிய பாதுகாப்புடன் அனைத்து துறைகளிலும் பெண்களை பணியமர்த்தலாம்.