Categories
மாநில செய்திகள்

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம்…. எல்லாரும் இதை பாலோவ் பண்ணுங்க…. மின்வாரியம் விழிப்புணர்வு…..!!!!

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மின் வாரியமானது விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மின் கட்டண வசூல் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளில் செலுத்தலாம். இதை தவிர மின் வாரிய இணையதளம், மொபைல் செயலி, பாரத் பில் பே, கூகுள் ஆப் ஆகிய டிஜிட்டல் முறையில் எங்கு இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம்.
இதற்கிடையில் மொத்தம் 3.20 கோடி பேரில் இலவசமாக மின்சாரம் பெறுபவர்களை தவிர்த்து, இரண்டு கோடி நபர்கள் மின் கட்டணத்தை செலுத்தி வரும் நிலையில், அவர்களில் 47% நபர்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மின் வாரியமானது முடிவு செய்துள்ளது. இதற்காக, டிஜிட்டல் முறையில் எந்தெந்த வழிகளை பின்பற்றி, எளிய வகையில் மின் கட்டணம் செலுத்தலாம் என்பது தொடர்பாக மின் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில், மின் வாரியம் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது, கொரோனா பரவும் சூழலில் மின் கட்டண மையங்களுக்கு வருவதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தலாம் என்று கூறினார்.

Categories

Tech |