Categories
தேசிய செய்திகள் பல்சுவை

டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1-ல் அறிமுகம்….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் குறிப்பிடப்படும் என்று தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கிகளில் அறிமுகமாகிறது.

Categories

Tech |