Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் ரூபாய் VS யூபிஐ…. இதுதான் வித்தியாசம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

ரிசர்வ் வங்கி  ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியது. இது பெரிய வங்கிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சில நகரங்களில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சோதனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் டிஜிட்டல் ரூபாய் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யூபிஜ,ஆர்டிஜிஎஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கணிசமாக உயர்த்தி விட்டது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,”ஏற்கனவே யூபிஐ  உள்ளிட்ட பல பரிவர்த்தனை தளங்கள் இருக்கிறது.

பின்னர் ஏன் டிஜிட்டல் ரூபாயை  கொண்டு வர வேண்டும். இதற்கும் யுபிஐ உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது நாம் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்புகிறோம். அதற்காக நாம் பணம் அனுப்பும் நபர்களிடமிருந்து அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை வாங்குகின்றோம். இந்நிலையில்  இரு நபர்கள் பணத்தை பரிவர்த்தனை செய்யும் போது  வங்கியின் வாயிலாக பரிவர்த்தனை நடைபெறுகிறது. ஆனால் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனையில் வங்கிக்கு  வேலை இல்லை. நேரடியாக 2  நபர்கள் வங்கி கணக்கு இல்லாமலேயே டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். எனவே இது  பரிவர்த்தனைகளை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |