Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அட்டை…. செல்போனின் பதிவிறக்கம் செய்வது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை  அச்சிட்டு வழங்கப்படும்.  இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் இணையதளம் வாயிலாக தங்களுடைய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தற்போது வாக்காளர் அட்டை பெறுவது மிகவும் எளிமையாக பட்டுள்ளது. ஆதாரத்தை பதிவிறக்கம் செய்வது போல வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்வது எப்படி?:

புதிய வாக்காளர் அட்டையை Voter Help Line மொபைல் ஆப் “https://nvsp.in மற்றும் http://voterporta.eci.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில்  வாக்காளர் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து “இ-எபிக்” பதிவிறக்கம் என்ற பட்டனை அழுத்தி வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் 6 என்று பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்த செல்போன் நம்பருக்கு வரும் ஓடிடிபி எண்ணை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காலை 11.14 மணியிலிருந்து பதிவிறக்கம் கொள்ளலாம்.

Categories

Tech |