Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட ஸ்ட்ரிக்ட் ஆடர்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்…!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு  முக்கியமான சுற்றறிக்கை ஓன்றை  பிறப்பித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகின்றது. இந்நிலையில்  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் மீண்டும் நடைபெற இருக்கிறது. அப்போது, காவலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக தமிழக டிஜிபி  சைலேந்திர பாபு, காவலர்களுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதன்படி தமிழகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒருநாள் வார விடுப்பால் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர்? எத்தனை பேர் இதில் விடுமுறையை முறையாக பயன்படுத்தி உள்ளனர்? எத்தனை பேர் விடுமுறை எடுத்துள்ளனர் என்பதை குறிப்பெடுத்து, அதை தலையமையகத்திற்கு அனுப்பும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். இது பற்றி தலைமையகத்திற்கு உடனே மெயில் அனுப்பும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், உங்கள் துறையில் முதல்வரின் திட்டத்தின்படி காவல் துறையிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் எந்தெந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு இருப்பது  தொடர்பாகவும் ரிப்போர்ட் தயார் செய்து, அதை விரைவில் தலைமையகத்திற்கு அனுப்புமாறு, டிஜிபி சைலேந்திர பாபு  உத்தரவிட்டிருக்கிறார். காவல் துறை மானியக் கோரிக்கை விரைவில் நடக்க இருக்கின்ற  நிலையில், அதற்கு தயாராகும் வகையில், இந்த விவரங்கள் கேட்கப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |