தமிழக முழுவதும் நேற்று மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அதே சமயம் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தலை மறைவில் இருந்த பிரபல ஏ ப்ளஸ் 13 ரவுடிகளும் சிக்கி உள்ளனர். இவர்களின் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிறுவையில் உள்ளது. இவர்களுடன் சேர்த்து பிடிக்கப் பட்ட மேலும் 15 பேரிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது.
தமிழக முழுவதும் தற்போது மின்னல் ரவுடி வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இணையத்தில் தகவல் பரவி வருவது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த ஐந்தாம் தேதி முதல் அவரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த பதிவை பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒருவேளை டிஜிபி பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரோ என கற்பனையில் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.