கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் அருணாச்சலம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அருணாச்சலம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அருணாச்சலம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டிஜேபி சைலேந்திரபாபு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மனுதாரரின் கோரிக்கையை டிஜேபி பரிசளித்ததாகவும், பணியில் சேர்ந்து 3 ஆண்டுகள் விண்ணப்பிக்காமல் 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்ததால் மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த தகவலை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து தவறான மனுவை தாக்கல் செய்ததற்காக இரண்டாம் நிலை காவலரான மனுதாரர் அருணாச்சலத்திற்கு ரூ.2000 அபதாரம் விதித்து டிஜேபி சைலேந்திரபாபுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.