Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவியோடு ரகசிய பேச்சு…. யாரை வீழ்த்த போறீங்க ஓபிஎஸ் ? வேதனைப்பட்ட முன்னாள் அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன் முதலாக இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது, அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஏகமனதாக ஒருமனதாக  முதலமைச்சராக அண்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு,  அந்த முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து வைத்தவர் யார் ? ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அன்றைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த பஞ்சாயத்து தான் இன்று வரை அந்த பஞ்சாயத்து நீண்டு கொண்டே இருக்கிறதே தவிர வேறு யாரும் ஒன்றரை கோடி தொண்டர்களில் யாரும் அந்த பஞ்சாயத்தை தொடங்கி வைக்கவில்லை. அந்த பஞ்சாயத்திலே அவர் முன்வைத்த கோரிக்கைகள் என்ன ? விசாரணை கமிஷன் வேண்டும், சின்னம்மாவையும் அவர் குடும்பத்தையும் சேர்க்க கூடாது, அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

அதற்குப் பிறகு மரியாதைக்குரிய அண்ணன் டிடிவி தினகரன் அவர்களோடு எதற்கு ரகசியமாக அவர் எதற்கு பேசுகிறார், அவர் இல்லத்தில் சென்று பேசுகிறார், யாரை காப்பாற்றுவதற்காக, யாரை வீழ்த்துவதற்காக, யாருக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துவதற்காக என்று அண்ணன் அவரிடத்திலே நீங்கள் கேள்வி கேட்டீர்கள். எடுத்த ஒரு தலைமை என்பது எடுத்த  நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.

சந்தேகமற்ற தலைமையாக இருக்க வேண்டும், அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும், மன உறுதியோடு கடைசி மூச்சு இருக்கும் வரை,  கடைசி நிலையில் இரத்தம் சிந்துகின்ற நிலை வந்தாலும் கூட மனதில் எடுத்த உறுதியான நிலைப்பாடோடு இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |