Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி சொன்ன ”அந்த’ விஷயம் …. கூடிய ஆதரவு கூட்டம்… திருதிருவென முழிக்கும் அதிமுக …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை நிறைவு செய்த சசிகலா கடந்த 8ஆம் தேதி தமிழகம் வந்தார். அவருக்கு தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது வரை ஓய்வில் இருக்கும் சசிகலா, அரசியல் குறித்து எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. இதனிடையே சென்னை வந்த சசிகலா வரும் வழியில் தொண்டரிடம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பேசினார்.

அதேபோல் டிடிவி தினகரன் தொடர்ந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என்றெல்லாம் சொல்லி வந்தார்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் சசிகலாவை வரவேற்க குவிந்த கூட்டம் குறித்து தற்போது வரை  தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகின்றது. அதிமுக தொண்டர்கள் பெரும்பாலான நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் சேர்ந்த கூட்டம் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் என்றும், டெல்டா பகுதியில் உள்ள மக்கள் என்றும் சொல்லப்பட்டது.

தென்மாவட்டங்களில் இருந்து ஆட்களை கூட்டி வந்து டிடிவி தினகரன் சசிகலாவை வரவேற்றுள்ளார். என்று சொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிவி தினகரன் என்று சொன்ன கருத்து அதிமுகவை நடுங்க வைத்துள்ளது. டிடிவி தினகரன் சொன்னது போல உண்மையிலேயே இவ்வளவு கூட்டம் உள்ளதா ? என்று அதிமுக தலைமை நிர்வாகிகள் திகைத்துப் போயுள்ளனர்.

தேர்தல் வரவிருக்கும் நிலையில் டிடிவி தினகரன் பக்கம் பெருந்திரளான மக்கள் ஆதரவு, அதிமுக தொடர்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில், அவர்கள் யாரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வில்லை என்றால் ஆட்சியை பிடிக்க முடியாத அபாயம் ஏற்படும் என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகிறார்கள். நாமக்கல்லில் இன்று பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி ஆட்சி வரும் என்று தமிழ்நாட்டு மக்கள் யாரும் நம்பல.  அம்மாவுடைய ஆட்சி வரும்னு தான் நம்புறாங்க.

எல்லா இடத்துலயும் எங்கள் கட்சி இருக்குங்கிறது. டெல்டாவில் இருந்து தென் மாவட்டங்கள் இருந்து வந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வேலூர்ல இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைக்கும்தான் இருந்தாங்க. அத்திபள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி வரைக்கும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள், தர்மபுரி, சேலத்தை சேர்ந்தவர்கள் தான் அங்க வந்துருந்தாங்க.

அதுக்கு பிறகு, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவுங்க இருந்தாங்க. வேலூர் பகுதியை சேர்ந்தவர்களோடு வெளி மாவட்டத்துல இருந்து வந்த நிர்வாகிகள் இருந்தாங்க. எங்களுடைய கட்சி தென்மாவட்டம் மட்டுமல்ல எல்லா பகுதிகளிலும் நன்றாக இருக்கிறது. எல்லா பகுதியிலும் எங்கள் கட்சி ஸ்ட்ராங்காக இருக்கின்றது. எங்களை மீறி யாரும் அரசியலிலே எதையும் செய்துவிட முடியாது. தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்குல்ல. கொஞ்சம் வெய்ட் பண்ணி பாருங்க என கூறிய கருத்து அதிமுகவுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |