Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி தினகரனுக்கு இறுகும் பிடி….டெல்லியில் இருந்து வந்த லெட்டர்…பெரும் பரபரப்பு…!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெ.ஜெயலலிதா, கடந்த 2016,டிசம்பர் 5 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பின், அதிமுக அரசு இரண்டாக பிளவுபட்டு, வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியும் உருவானது.

இதை அடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றதால், அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக  பொறுப்பேற்றார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும், உரிமை கோரியதால், அந்த சின்னத்தை முடக்கி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தனது கட்சிக்கு பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் தர எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த டிடிவி தினகரன் முன்வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் அணியினர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், இது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் உட்பட பலரை,இவ்வழக்கில் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. டிடிவி தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து,  இது தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் வெளியில் உள்ளார்.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், ‛தினகரன் முன்பணமாக தமக்கு ரூ.2 கோடி கொடுத்துள்ளதாக, அமலாக்கத் துறையிடம் அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நாளை (ஏப்ரல் 8)ம் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், நேரில் வந்து ஆஜராகும்படி, டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |