மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் மேகலா என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிபன் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மேகலா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மேகலாவின் உறவினர்கள் காசிமேடு பகுதியில் வைத்து தங்கள் உடல் முழுவதும் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.