டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் தருவதாகவும், அந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை விட இது சிறப்பாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறியுள்ளார்.