Categories
சினிமா

“டிமான்ட்டி காலனி-2″…. படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… அருள்நிதி வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

கடந்த 2015ம் வருடம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகிய படம் டிமான்ட்டி காலனி. இப்படம் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அஜய் ஞானமுத்து அறிமுகமாகிய முதல் திரைப்படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் டிமான்ட்டி காலனி படத்தின் 2ஆம் பாகத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு இதன் 2ம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக் கொண்டார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணு கோபால் இந்த திரைப்படத்தினை இயக்குகிறார். இதற்கிடையில் டிமான்ட்டி காலனி 2ஆம் பாகத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவலை அருள்நிதி இணையத்தில் பகிர்ந்துள்ளார். டிமான்டி காலனி 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் அடிப்படையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என அருள்நிதி பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |