Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டியூசனுக்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்னல் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னூர் அருகே இருக்கும் ஜீவா நகரில் முனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவநேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவநேசன் நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சனீஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் மரத்தடியில் சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

அப்போது மின்னல் தாக்கியதால் படுகாயமடைந்த சிவநேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |