மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஜின் என்ற பகுதியில் 52 வயது டியூஷன் ஆசிரியர் கடந்த 11ஆம் தேதி தன்னிடம் டியூஷன் பயின்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறு மீது தொடர்பாக யாரிடமும் கூறாமல் டியூஷனுக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் டியூஷனுக்கு செல்லாமல் நின்றது குறித்து சிறுமியிடம் கேட்டபோது உண்மை தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனே போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் டியூஷன் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.