கர்நாடகாவில் பணி நேரத்தில் போலீசார் இருவர் சீருடையில் மதுபானம் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரங்கசாமி மற்றும் அதே ரயில் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ராமேகவுடா. இவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடம் ஒன்றில் சென்று இருவரும் காவலர் சீருடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலானது.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த வீடியோவில் இருந்தது இவர்கள் இருவரும் தான் என உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச கவுடா உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.