அசாம் மாநிலத்தில் மாணவர்கள் டியூசன் படிக்கச் சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் கொசைகாவன் என்ற பகுதியில் நிர்மல் பால் மற்றும் மாலிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். நிர்மல் கியாஸ் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். அதுதவிர மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் வீட்டுக்கு சென்று மணிக்கணக்காக நின்று கதவை தட்டி உள்ளனர். ஆனாலும் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. உடனடியாக மாணவர்கள் அனைவரும் அக்கம் பக்கத்தில் இருந்தவரிடம் கூறியுள்ளனர். அப்போது அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, தம்பதிகள் உட்பட மூன்று மகள்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தினர் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் கடனை திரும்பத் தர முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.