Categories
உலக செய்திகள்

டிரம்ப்க்கு நேரப்போகும் நிலை இது தான்…. அதிரடியாக அறிவித்த…. ஈரான் அதிபர்….!!

சதாம் உசைனின் நிலை தான் அதிபர் ட்ரப்புக்கும் ஏற்படும் என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.  

ஈராக்கின் அதிபரான ஹசன் ரவ்ஹானி, அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் எங்களது தற்போதைய வரலாற்றில் நாங்கள் இரண்டு வகையான மோசமான மனிதர்களை சந்தித்துள்ளோம். அதில் ஒருவர் டிரம்ப், இன்னொருவர் சதாம் உசேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சதாம் உசேன் எங்களுடன் போர் நடத்தினார், டிரம்ப் எங்களுடன் பொருளாதார போரில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இரண்டிலும் ஈரான் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சதாம் உசேன் அவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை பெற்றுவிட்டார். அதேபோல் டிரம்ப்க்கு ஏற்பட்டுள்ள விதியும் சிறப்பானதாக இருக்காது.

சதாமுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 2003 ஆம் வருடத்தில் சதாம் உசேன் ஈராக்கில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். மேலும் சியா இஸ்லாமியர்களை கொண்டுள்ளார் என்பதால் அமெரிக்கா அவரின் ஆட்சியை கவிழ்த்துள்ளது. இதையடுத்து அவர் தலைமறைவானார். அதனைத்தொடர்ந்து அமெரிக்க படையினரால் பிடிக்கப்பட்ட சதாம் உசேன் 2006 ஆம் வருடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே போல தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் நான்கு வருட கால ஆட்சியில் ஈரான் போன்ற நடவடிக்கைகளையே கடைபிடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |