Categories
தேசிய செய்திகள்

டிரம்ப்பால் முடியல… மோடியால் முடிந்தது… ஜெ.பி.நட்டா புகழாரம்…!!!

அமெரிக்காவில் டிரம்ப் செய்ய முடியாததை இந்தியாவின் பிரதமர் மோடி திறம்பட செய்துள்ளார் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஆட்டம் காட்டி வருகிறது. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்படாததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார். ஆனால் இதில் பிரதமர் மோடி திறம்பட செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் நிலையில்லாத தன்மை நிலவுகிறது. ஆனால் இந்தியா மீண்டு வந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |