டிரம்பின் சகோதரி, தனது சகோதரர் மிகவும் கொடூரமானவர் மற்றும் கொள்கையற்றவர் என குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவரின் ரத்த தொடர்புடைய சகோதரியிடமிருந்து வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரி மேரி ஆன், என்னுடைய சகோதரர் டிரம்ப் மிகவும் கொடூரமானவர், கொள்கையற்றவர் என்று அவர் பேசியுள்ள ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற பிரம்பின் மருமகன் மேரி டிரம்ப் என்பவரிடமே 2018 மற்றும் 2019 ஆம் காலகட்டத்தில் மேரி ஆன் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அந்த உரையாடலை மேரி டிரம்ப் பதிவு செய்து பாதுகாத்து வந்திருக்கிறார். மேரி ஆன், டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்கள் மற்றும் அவரின் குழந்தைகள் குடும்பங்களில் இருந்து பிரித்து வைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என அனைத்துவிதமான விஷயங்களையும் மேரி ஆன் விவரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பொறுப்பான பதவியில் இருக்கும் டிரம்ப், தினந்தோறும் பொய் பேசி வருவதாகவும், அவரிடம் கொள்கை என்பதே சிறிதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகிலுள்ள கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியுள்ளது என டிரம்பை குறிவைத்து மேரி ட்ரம்ப் புத்தகம் ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டுள்ளார்.
அந்தப் புத்தகத்தை ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை பொய்களின் புத்தகம் என்று கூறியுள்ளது. மேலும் தனக்கான கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு நண்பர் ஒருவரிடம் பணம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் டிரம்ப் தன்னை சேர்த்தார் எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி ட்ரம்பின் வீட்டுப்பாடங்களை தாம் முடித்து தருவதாகவும் அவர் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இது குறித்து ஜனாதிபதி டிரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ எந்த ஒரு கருத்தும் கூறவில்லை.