Categories
உலக செய்திகள்

டிரம்ப் – ஜோபிடன் இடையே இறுதிகட்ட விவாதம்

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான இறுதிக் கட்ட விவாதத்தில் அரசுக்கு தன்னுடைய வரியைக்கூட செலுத்தாதவர் தான் டொனால்ட் ட்ரம்ப் என ஜோபிடன் விவரித்தார்.

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேராக 3 விவாதங்களிலும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஒரு விவாதத்திலும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஓஹியோவில் முதல்கட்ட நேரடி விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி மியாமியில் இரண்டாம் கட்ட விவாதம் நடைபெறவிருந்த நிலையில். அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இறுதிக்கட்டமாக டென்னஸி மாகாணம் நாஸ்வேலியில் டிரம்ப் ஜோபிடர் இடையே இன்று காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அதிபர் டிரம்ப் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு கொரோனா பரவ தன்னுடைய அரசு காரணம் இல்லை என்றும் தவறு செய்தது சீனா தான் என்றும் குற்றம் சாட்டினார். இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவிற்கு தடுப்பூசி வந்துவிடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜோதிடம் பேசுகையில் அரசுக்கு தன்னுடைய வரியைக்கூட செலுத்தாதவர் தான் டொனால்ட் ட்ரம்ப் என கடுமையாக விமர்சித்தார். ரஷ்யாவில் இருந்து டிரம்புக்கு பணம் வருவதாக ஜோடியுடன் விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த ட்ரம்ப் சீனா, ரஷ்யா அவர்களிடமிருந்து பணம் எதுவும் பெறவில்லை எனவும். தன்னுடைய வங்கிக் கணக்கு வெளிப்படையானவை எனவும் பதிலளித்தார். வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்து இருந்தார் என்றும். வடகொரியா விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை தமது அரசு செய்ததாகவும் டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |