Categories
உலக செய்திகள்

‘டிரம்ப் படகு அணிவகுப்பு’… இறுதியில் நடந்த சோகம்…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்க்கு ஆதரவாக உற்சாகத்துடன் தொடங்கிய படகு அணிவகுப்பு இறுதியில் சோகத்தில் முடிந்துள்ளது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். அவர் தற்போது நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரை ஆதரித்து டெக்ஸாஸ் மாகாணத்தில் அவரின் ஆதரவாளர்கள் படகு அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அங்குள்ள டிராவிஸ் ஏரியில் நேற்று படகு அணிவகுப்பு நடந்தது.

அதில் ஏராளமானவர்கள் பங்கேற்று படகுகளை உற்சாகத்துடன் அணிவகுத்தனர். அப்போது பல்வேறு படகுகள் அடுத்தடுத்த தண்ணீரில் மூழ்க தொடங்கின. அதில் பயணித்தவர்கள் திடீரென தண்ணீரில் விழுந்து தத்தளித்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரியில் ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு குழுவினர்கள் விரைவாக செயல்பட்டு தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். அந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும் உற்சாகத்துடன் தொடங்கிய படகு அணிவகுப்பு சோகத்தில் முடிந்துள்ளது. அந்த ஏரியில் படகுகளை செலுத்துவது சில சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும். அதே சமயத்தில் படகு அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது பெரிய அலைகள் உண்டாக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைப் போன்றே ப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் படகு அணி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |