Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த இளம்பெண்…. சக்கரத்தில் சிக்கியதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளம்பெண் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பரளி பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் பணிபுரியும் வடமாநில பெண்களை டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு பண்ணைக்கு சென்றுள்ளனர்.

அப்போது டிராக்டரின் பின்புறம் நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிராமணி லஹாரா (வயது 20) என்ற இளம்பெண் திடீரென நிலைதடுமாறி டிப்பரில் இருந்து கீழே விழுந்துள்ளார். மேலும் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |