Categories
மாநில செய்திகள்

டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை….. சினிமா பட பாணியில் நிகழ்ந்த கொடூரம்….!!!

கடலூரில் நிலப் பிரச்சினையால் டிராக்டர் ஏற்றி விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள சக்தி விளாகம் என்ற கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் என்பவரின் மகன் ராமதாஸ். இவர் ஒரு விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு இருந்த ராமதாசை ஸ்ரீதர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டிராக்டர் ஏற்றி கொலை செய்தார்.

இது தொடர்பாக சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |