பிரியங்கா காந்தி டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின்வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ந்த போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறியதாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சாலையோரமாக நின்ற டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
அதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடலில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த நபர் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் என்பதால் பெரும் சோகம் ஏற்பட்டது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ராம்பூருக்கு சென்ற டாக்டர் பேரணியின்போது பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார் என்று கூறியுள்ளார்.