டிராக்டர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் செம்மடை பகுதிக்கு அருகில் சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக டிராக்டர் ஒன்று சுமை ஏற்றி வந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த எதிர்பாராத விதமாக அதன் அருகே வந்த லாரி டிராக்டரின் மீது மோதியது. இந்த நிலையில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவிகொண்டு பலியான ஓட்டுனரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.