Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 24 ல் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் சாலை மீது லாரி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் சித்தௌலி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு சிலரின் உடல்நிலை கவனிக்கிடமாக இருக்கின்ற நிலையில் சீதாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலின் படி டிராக்டர் மீது லாரி வேகமாக மோதியதில் டிராக்டர் ட்ராலி இரண்டாக உடைந்துள்ளது. மேலும் சாலையில் இருந்தவர்கள் மீதும் மோதியுள்ளது. இதனை அடுத்து டிராக்டரில் இருந்த பயணிகள் அனைவரும் ஷாஜகான்பூரில் இருந்து பாரபங்கியில் உள்ள தேவாஷெரீப் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த விபத்தை அடுத்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அதனை சரி செய்து இருக்கின்றனர்.

Categories

Tech |