மதுரையில் டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மின்நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மலைச்சாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான விக்கிரமலிங்கத்தில் தற்காலிக ஊழியராக துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மலைச்சாமி அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளார்.
இதையடுத்து அவர் காடுபட்டி அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மலைச்சாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த மலைச்சாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.