Categories
Tech

“டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம்”…. யூடியூப் செயலியில் புது அப்டேட்….. கூகுள் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!!

கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். இதற்கு முன்னதாக யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடவேண்டிய தேவையில்லை.
இதையடுத்து வீடியோக்கள் பக்கத்திலுள்ள டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அவற்றில் நாம் தேவையான வார்த்தைகளை தேடி படிக்கலாம். தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |