திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பூங்கா ரோடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் இருக்கிறது. இங்கிருந்து வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மாரில் இருந்து தீப்பொறி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது மரத்தில் இருந்து கம்பு டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து தீப்பொறி ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பணியாளர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.