Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஊழியர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி ஒருவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சாராகிராமம் ஜே.ஜே நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாதிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜராஜன் என்பவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் அரவிந்தன் பாதிரி நகருக்கு சென்றுள்ளார். அங்கு டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருந்தது. இதை சரி செய்வதற்காக அரவிந்தன் மின்சாரத்தை அணைத்து விட்டு டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒலக்கூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் டிரான்ஸ்பார்மரை  சரியாக அணைக்காததால்  மின்சாரம் தாக்கிய அரவிந்தன் உயிரிழந்தது தெரியவந்தது. அதன்பிறகு அரவிந்தன் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |