டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோட்டவாரம் பாலத்தோப்பு விளை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷெர்லின்(29) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷெர்லின் தனது நண்பரான விஜின்(25) என்பவருடன் அழகிய மண்டபம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் வீயன்னூர் தோட்டத்து விளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஷெர்லினை பரிசோதித்து பராமரித்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.