சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம்தான். அங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் எப்போதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி வேப்பேரி பகுதியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு சென்னையின் போக்குவரத்து நெரிசல் கண்காணிக்கப்படுகிறது. டிராபிக் தொடர்பாக பொதுமக்கள் 9003130103 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தால் உடனே கூகுள் மேப் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து போக்குவரத்தை சீர் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.