Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டிராவிட்டுக்கு ஓய்வு…. நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.!!

நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா அணியை ஏற்கனவே பிசிசிஐ கடந்த மாதமே அறிவித்துவிட்டது. முதற்கட்டமாக இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நவம்பர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் கேப்டனாகவும், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் நியூசிலாந்து தொடர் நடைபெற சில தினங்களே இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாலில் தற்போது இருக்கும் இந்திய அணி நேரடியாக அங்கிருந்து நியூசிலாந்துக்கு செல்லும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பையில் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொடருக்கான தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவிஎஸ் லக்ஷ்மன் உடன் பேட்டிங் பயிற்சியாளராக ஹிருஷிகேஷ் கனிட்கர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே ஆகியோர் நியூசிலாந்துக்கு செல்வார்கள் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

ஷிகர் தவான்(கே), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கீ ), சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2022 – T20I தொடர் :

முதல் டி20 –  நவம்பர் 18 ஆம் தேதி (ஸ்கை ஸ்டேடியம், வெலிங்டன்)

2ஆவது டி20 – நவம்பர் 20 ஆம் தேதி (பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய்)

3ஆவது டி20  நவம்பர் 22 ஆம் தேதி (மெக்லீன் பார்க், நேப்பியர்)

இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2022 – ஒருநாள் தொடர் :

முதல் ஒருநாள் போட்டி –   நவம்பர் 25 ஆம் தேதி (ஈடன் பார்க், ஆக்லாந்து)

2ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 27 ஆம் தேதி (செடான் பார்க், ஹாமில்டன்)

3ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 30 ஆம் தேதி  (ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்)

Categories

Tech |