நேற்று தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களை வாக்கினை அளித்தனர். மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களும் வந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதையடுத்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்த அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
மேலும் நேற்று முழுவதும் விஜய் சைக்கிளில் வந்ததுதான் டிரெண்டிங்கில் இருந்தது. மேலும் இது ஒரு பேசுபொருளாகவும் மாறியது. இதையடுத்து விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா சென்றுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.