Categories
தேசிய செய்திகள்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… குடிசைக்குள் புகுந்ததால் அரங்கேறிய கொடூரம்….!!!!

சாலையோரம் அமைக்கப்பட்ட குடிசையில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ஆஜானி தபாரியா கிராமத்தில் ஒரு சாலையோர குடிசை அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்தது. இதனால் குடிசைக்குள் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை என மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் லாரியில் லிப்ட் கேட்டு சென்ற மற்றொரு நபரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். தப்பி ஓடிய லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |