ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பயணிகளும் தங்களது ஓட்டுனர் இருக்கையில் ஏர்பேக் வைத்திருப்பதை கட்டாயமாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
ஒரு கார் விபத்துக்கள் ஏற்பட்டால் இழப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் ஏற்படுகின்றது. அவற்றை குறைப்பதற்கு இது மிக முக்கிய வழியாகும். எனவே ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏர்பேக் கட்டாயம் ஆக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் இனி வரப்போகும் அனைத்து மாடல்களிலும் ஏர்பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.