Categories
உலக செய்திகள்

டிரைவர்களே… “பெட்ரோல், டீசலுக்கு” உச்சவரம்பு நிர்ணயம்…. கடுமையாக நிலவும் பொருளாதார நெருக்கடி…. வெளியான தகவல்….!!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டை கருத்தில் வைத்து அந்நாட்டுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.

இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாததால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் வைத்துக்கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

அதாவது ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ஒரு தடவை வரும்போது ரூபாய் 1,500 வரை எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ரூபாய் 5,000 வரை எரிபொருளை வாங்கிக் கொள்ளலாம் என்றும், இருசக்கர வாகனங்கள் 1,000 ரூபாய் வரை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |