கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியாக்குறிச்சி ஜி.பி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்ய நாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சத்தியநாராயணனும் அவரது தாய் தனலட்சுமி அப்பகுதியில் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் நீண்ட நேரமாகியும் சத்ய நாராயணனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சத்திய நாராயணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.