முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அந்தோணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம் குமாரும், அந்தோணியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த பிரேம்குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரேம்குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.