ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முக்கியமான சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெறுவதற்கு முக்கியமான விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது மாநில அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் டிரைவிங் பழகுபவர்கள் நேரடியாக ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மையத்தில் படிப்பவர்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவர்கள் வாகனத்தை ஓட்டி காட்டுதல் மற்றும் ஆர்டிஓ விடம் நேரடியாக வாகனத்தை காட்டுதல் போன்றவற்றை செய்ய வேண்டாம். இந்தத் திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு முக்கியமான விதிமுறைகளை அறிவுறுத்தி அதை கடைபிடிக்குமாறு அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் பயிற்சி மையங்கள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தங்களுடைய அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். அதன் பிறகு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பயிற்சி பெறுவதற்கு குறைந்தது 1 ஏக்கர் நிலமும், கனரக வாகனங்கள் பயிற்சிக்கு 2 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். அதன்பிறகு கனரக வாகனங்கள் மற்றும் நடுத்தர வாகனங்களுக்கான பயிற்சிக்கான கால அளவு 38 மணி நேரம் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியை 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். லேசான வாகனங்களுக்கான பயிற்சி நேரம் 29 மணி நேரம் இருக்க வேண்டும். இந்த பயிற்சியை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். போக்குவரத்தில் பாடத்திட்டத்தின்படி உயரத்தில் test track சோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயோமெட்ரிக் மற்றும் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். ஒரு stamulator மற்றும் test drive இருக்க வேண்டும்.
அதன் பிறகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஒரு விண்ணப்ப படிவம், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாடகை ஒப்பந்தம், பயன்பாட்டு பில், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ், பிறப்புச் சான்று, கல்வி சான்றிதழ், வயது சான்றிதழ், பணியமர்த்துபவர் சான்றிதழ் மற்றும் பான் கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இணையதளத்திலும், ஆர்டிஓ அலுவலகத்திலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.