கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், ஆர்சி போன்றவற்றைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸை கருத்தில்கொண்டு ஓட்டுனர் உரிமம், ஆர் சி,பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற வாகன ஆவணங்களை புதுப்பிக்கத் தேதியான கால அளவை கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழக அரசு நீட்டித்து வந்தது. அதிலிருந்து தற்போது வரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டு இதன் காலக்கெடு கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காலாவதியான ஓட்டுனர் உரிமம், ஆர் சி,பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி, 2020ம் ஆண்டு அன்று காலாவதியாகி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக புதுப்பிக்க முடியாத ஆவணங்களை மக்கள் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.