Categories
தேசிய செய்திகள்

டிரோன் கொண்டு சென்ற கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சியில் டாக்டர்கள் ….!!

இந்தியா முழுவதும் பரவி கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாவட்டத்திலும் குழந்தை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மாவட்டம் கடைக்கோடியில் உள்ள ஹரகாட்டே என்ற கிராமத்தில் சந்தபுரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பு ஊசி குப்பிகளை சிறிஞ்களுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் எடுத்து சென்று காலை 9.55 மணிக்கு ஒப்படைத்தது.

அதன் பிறகு அந்த டிரோன் சந்தபுரா ஆரம்ப சுகாதார நிலைய திரும்பிச் சென்றது. அதனைத் தொடர்ந்து சாலை வழியாகச் சென்றால் 40 நிமிடத்தில் சென்றடையக் கூடிய நேரத்தை இந்த டிரோன் 10 நிமிடத்தில் சென்றடைந்துள்ளது. இதையடுத்து இந்த டிரோன் கொரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்ததை ஆரம்ப சுகாதார பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரி டாக்டர் மணிஷா தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |