Categories
உலக செய்திகள்

டிவிக்கு நேரலை அளித்த நிருபர்…. மயிரிழையில் உயிர் தப்பினார்…. வெளியிட்டுள்ள நடுங்க வைக்கும் வீடியோ…!!

வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்த போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிருபர் மயிரிழையில் தப்பித்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்கிழக்கு அமெரிக்காவின் வட கரோலினாவில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் இந்த பயங்கர மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் வட கரோலினாவில் உள்ள அலெக்சாண்டர் கவுண்டியில் பாலம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளது. இதனை fox46 டிவி நிருபர் Amber Roberts நேரலையில், பாலத்தின் மீது நின்று கொண்டு தகவல்களை அளித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து இடிந்த இடத்திலிருந்து சில அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த Amber அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் Amber பதிவிட்டுள்ளார். இதில், “நானும் என்னுடன் இருந்த ஒளிப்பதிவாளரும் கடவுள் அருளால் நலமாக உள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அலெக்சாண்டர் கவுண்டி பகுதியில் வெள்ளத்தினால் நான்கு பாலங்கள் மற்றும் 10 சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |