சென்னையை அடுத்துள்ள மாதாவரம் தெலுங்கு காலனி என்ற பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மாதவரம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், 12 வயதில் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர். அவரது மகள் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனது வீட்டில் டிவி யை அதிக சத்தம் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அவருடைய தாய் அவரை கடுமையாக கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் 7 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.