அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. சக்திவேல் நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருந்துள்ளார். இவர் மதியம் 2:30 மணி அளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
இதனால் விஜயலட்சுமி சத்தம் போட்ட பொழுது விஜயலட்சுமியின் முகத்தில் கொள்ளையன் மிளகாய் பொடியை தூவினான். இதனால் அவர் நிலைகுலைந்துப்போனார். உடனடியாக கொள்ளையன் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். இதையடுத்து விஜயலட்சுமி கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றார்கள்.