Categories
அரசியல்

டிவி வாங்க போறீங்களா?…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்கள் இதனைத் தெரிந்து கொண்டால் உதவியாக இருக்கும்.

* முதலில் எந்த பட்ஜெட்டில் டிவி வாங்க போறோம் ? என்பதை தீர்மானித்துக் கொள்ளுதல் நல்லது. அதேபோல் EMI-ல் டிவி வாங்குவதற்கு பதில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் ஆஃபரில் குறைந்த விலையில் டிவி வாங்கினால் லாபமாக இருக்கும்.

* இரண்டாவதாக நம்முடைய அறைக்கு ஏற்றவாறு டிவியின் size-ஐ தேர்வு செய்ய வேண்டும். டி.விக்கும் உங்களுக்கும் இடையே தொலைதூர பார்வை மிக சிறந்த அனுபவத்தைப் பெற வேண்டும். அதன்படி, ஸ்கிரீன் சைஸ் 24 இன்ச் என்றால் குறைந்தபட்ச இருக்கை தூரம் 3 அடியாகவும், அதிகபட்ச இருக்கை தூரம் 5 அடியாகவும் இருக்க வேண்டும். அதேபோல் ஸ்கிரீன் சைஸ் 32 இன்ச் என்றால் குறைந்தபட்ச இருக்கை தூரம் 4 அடியாகவும், அதிகபட்ச இருக்கை தூரம் 6.5 அடியாகவும் இருக்க வேண்டும்.

* டிவி டிஸ்பிளே – பொதுவாக Normal LED type எல்லாருடைய டிவியிலும் இருக்கும். இது இல்லாமல் QLED, OLED typeம் உள்ளது. உங்களுக்கு டிஸ்பிளே குவாலிட்டி சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் QLED type சிறந்த தேர்வாக இருக்கும்.

* அடுத்ததாக டிவியின் ரிசல்யூஷன் ரொம்ப முக்கியம். வேறு வழியில்லை என்றால் Full HD ஸ்மார்ட் டிவி வாங்கலாம். ஆனால் கண்டிப்பாக 4k வாங்கினால் பெஸ்டாக இருக்கும்.

* டிவியின் ஸ்பீக்கரை பொருத்தவரை நமக்கு 20w அல்லது 40w தான் கிடைக்கும். இருப்பினும் நீங்கள் டிவி வாங்கும் போது கூடவே சவுண்ட் பார் சேர்த்து வாங்கினால் சவுண்ட் எஃபெக்ட் வேற லெவலில் கிடைக்கும். அதேபோல் நீங்கள் டிவி மற்றும் சவுண்ட் பார் வாங்கும் போதும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளதா என்பதை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

* நீங்கள் வாங்கக்கூடிய டிவியில் HDMI ARC சப்போர்டுடன் உள்ளதா ? என்பதை சோதிக்க வேண்டும்.

* இப்போது கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் ஈத்தர்நெட் இணைப்புகள் மற்றும் வைஃபை உள்ளமைக்கப்பட்டுள்ளது.

* டிவியின் Warranty-ஐ பொருத்தமட்டில் டிவியை நேரடியாக கடைக்கே சென்று வாங்கினாலும் சரி, ஆன்லைனில் வாங்கினாலும் சரி Warranty பொதுவான ஒன்றாக இருக்கும். ஆன்லைனில் டிவி வாங்கும் போது 10 நாள்கள் ரீபிளேஸ்மென்ட் Warranty-ம் உண்டு.

Categories

Tech |